கடந்த ஆண்டுக்கான (2022) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆகஸ்ட் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் உள்ள 100 மையங்களில் 1,721 மதிப்பீட்டுப் குழுக்களின் கீழ் ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த மதிப்பீட்டு பணிகளில் 27,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதுடன், இது பாடசாலை விடுமுறை நாட்களில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.