நாட்டில் CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

காலி, பதுளை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரிய அபாய நிலை காணப்படுவதாக அதன் பொதுச் செயலாளர்  தர்மகீர்த்தி அப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் தற்போது கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன எனவும் குறிப்பாக  அதிகாரிகளின் ஓய்வு காரணமாக இந்த சோதனைகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதுதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இதற்கான  விரைவான நடவடிக்கையாக, ஆட்சேர்ப்பு மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை தற்காலிகமாக நீட்டிக்க பரிந்துரைக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

Social Share

Leave a Reply