ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று (15.08) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில்வே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், ரயில் கடவையை கடக்கும்போது சைக்கிளை தள்ளியதால் விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.