மரம் முறிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலன மற்றும் இஹலகொட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்த காரணத்தில் ரயில் சேவைகள் தாமதமடையும் என ரயில்வே பொது முகாமையாளர் எம்.ஜே.இந்திபொலகே இன்று காலை அறிவித்திருந்தார்.
இதன்காரணமாக கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கவிருந்த நான்கு ரயில்கள் மற்றும் கொழும்பிலிருந்து பொல்கஹவெல பகுதிக்கு செல்லும் இரண்டு ரயில்கள் தாமதமடையும் என அவர் மேலும் அறிவித்திருந்தார்.
குறித்த மரங்களை அகற்றி ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டதையடுத்து, தற்போது இப்பகுதிக்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.