தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் மிருகக்காட்சிசாலையின் தலைமை பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (15.08) மிருகக்காட்சிசாலையின் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பத்தில் மோதி, அவ்வழியே சென்றுகொண்டிருந்த குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மின் கம்பம் விழுந்ததிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் குறித்த தலைமை பாதுகாப்பு அதிகாரி களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 54 வயதுடைய உபுல் செனரத் மரகந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.