ரோயல் கல்லூரி 15 வயதுக்குட்பட்ட அணி சம்பியன்!

15 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப் போட்டி இன்று (16.08) கொழுப்பு வெஸ்லி மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் ஓட்ட வித்தியாசத்தில் ரோயல் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இசிப்பத்தன கல்லூரி அணி 55 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜனிந்து பெர்னாண்டோ, நவனிந்து பெர்னாண்டோ ஆகியோர் தலா 25 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். ரோயல் கல்லூரி அணியின் பந்துவீச்சில் ஒஷான் சுலக்ஷன, செஹது சூரியராச்சி ஆகியோர் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ரோயல் கல்லூரி அணி 29.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஹிருன் மதீஷ 95 ஓட்டங்களையும், செஹது சூரியாராச்சி 17 ஓட்டங்களையும் பெற்றனர். வீழ்த்தப்பட்ட 02 விக்கெட்களையும் டஸித் செனால் கைப்பற்றினார்.

ரோயல் கல்லூரி அணிக்கு ரஷான் பீரிஸ் தலைமை பயிற்றுவிப்பளராகவும், சந்ருவான் பெர்னாண்டோ, வசந்த சத்தரசிங்க, பிரகீத் பெர்டினாண்டோ ஆகியோர் உதவி பயிற்றுவிப்பாளர்களாக செயற்பட்டு இந்த வெற்றியினை பெற மாணவர்களை பயிற்றுவித்துள்ளனர்.

இசிப்பத்தன அணிக்கு சத்துரங்க நாலாக, டமித் நாவங்க உதவி பயிற்றுவிப்பார்களாகவும் கடமையாற்றியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version