இந்த நாட்களில் சருமத்தை பாதுகாப்பது அவசியம்!

இன்றைய நாட்களில் அதிக சூரிய ஒளியின் காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.

உறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் சருமத்தில் கடுமையான சூரிய ஒளியின் விளைவுகளை குறைக்க முடியும் எனத் தெரிவித்த அவர், சூரிய ஒளியை வலுவாக வெளிப்படுத்துவதன் மூலம் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான வெயிலினால், காலை 10 மணி முதல் 2 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இருப்பினும் நீங்கள் வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், சூரிய ஒளியில் இருந்து உங்கள் சருமத்தை கவனித்துக் கொள்வது அவசியம் என வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சூரிய ஒளி தோலில் குறுகிய கால தோல் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். அத்துடன் சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவதால் சருமம் விரைவில் வயதாகிவிடும் த்ன்மையை பெறுகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வதுடன், Body lotionsகளை பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply