KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள்!

யாழ். தீவகக் கல்வி வலயத்திற்கான, KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள் KTP Consultancy & Training நிறுவனத்தின் நிறுவுனரும் பெருநிறுவனப் பயிற்றுவிப்பாளருமான துரைராஜா பிரஷாந்தன் அவர்களால் யாழ்.வேலணை மத்திய கல்லூரியில் நேற்று (16.8) மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.

“வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் க.பொ.த.(சா/த) & (உ/த) மாணவர்களுக்கும் , “சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி” ( Team Effort for Better Results – TEBR) எனும் தலைப்பில் முழுமையான ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பாடசாலைகளுக்கு இவ்வாறான செயற்பாடுகள் அவசியமாக தேவை எனும் அடிப்படையில் இந்த செயலமர்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இந்த செயலமர்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் சிறப்புரையாற்றியதுடன், தொழில்வாண்மை சுய ஊக்குவிப்புப் பயிற்சிகள் தமது மாகாணப் பாடசாலைகளுக்கும் தேவை என்பதையும் அவரது உரையில் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் இந்த செயலமர்வை நடாத்த தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஞானசுந்தரன் அனுமதி வழங்கியிருந்ததுடன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் T. ஜோன் குயின்டஸ் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். மேலும் பாடசாலை அதிபர் வி.இ.ஹஸ்ரன் றோயின் மேற்பார்வையில் செயலமர்வு இனிதே இடம்பெற்றது.

இவ்விரு இலவசப் பயிற்சிகளும் KTP Consultancy & Training நிறுவனத்தின் தனிநபர் சமூகப் பொறுப்புணர்வின் (PSR – Personal Social Responsibility) செயற்திட்டமாகும்.

இந்த செயலமர்வுகளை ஒழுங்கு செய்ய உதவிய அனைவருக்கும், KTP Consultancy & Training நிறுவனத்தார் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள்!
KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள்!

Social Share

Leave a Reply