முதற் தடவையாக யாழ் அணிக்கு நான்காமிடம்

யாழ் அணி இல்லாத இறுதிப் போட்டி முதல் முறையாக! வனிந்து இலங்கை அணியின் தலைவராகலாம்?

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் முறையாக ஜப்னா கிங்ஸ் அணி சம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்துள்ளது. இரண்டாவது அணியை வெளியேற்றும் போட்டி பி-லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இதில் கண்டி அணி 61 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் காலி அணியுடன் விளையாடவுள்ளது.

189 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடிப்பாடிய யாழ் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. சொஹைப் மலிக், டேவிட் மில்லர் ஆகியோரது இணைப்பட்டம் அணியை தூக்கி நிமித்த ஆரம்பிக்க மில்லர் ஆட்டமிழந்தார். ஆனாலும் ஆரம்ப தடுமாற்றம் வெற்றியினை பெறுவதனை தடுத்தது.

கண்டி அணியின் பந்துவீச்சில் வணிந்து ஹஸரங்க இன்று அபாரமாக பந்துவீசி யாழ் அணியின் விக்கெட்களை தேவையான நேரத்தில் பதம் பார்த்தார். அவரின் பந்துவீச்சுக்கு யாழ் அணியினர் தடுமாறிப்போனார்கள். முக்கிமான போட்டி ஒன்றில் யாழ் அணியினர் கொஞ்சம் கூட போராடாமல் மிக மோசமாக தோற்றுப் போனார்கள்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய கண்டி அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கண்டி அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது. பக்கர் ஷமான் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்த போதும் மறு புறத்தில் மொகாமட் ஹரிஸ் சிறப்பாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அவர் ஆட்டமிழக்கமால் நிலைக்க மறு புறத்தில் வந்தவர்கள் அதிரடி நிகழ்த்த கண்டி அணி மிகப்பெரிய இலக்கை தொட்டுள்ளது. டினேஷ் சந்திமால், வனிந்து ஹஸரங்க ஆகியோர் அதிரடி நிகழ்த்த அழுத்தங்களின்றி கண்டி அணி ஓட்டங்களை குவித்தது.

பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண, நுவான் துஷார, அசோல குணரட்ன ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றியபோதும் ஓட்டங்களை வழங்கினார்கள். டுனித் வெல்லாலகே விக்கெட்களை கைப்பற்றாத போதும் இறுக்கமாக பந்துவீசியிருந்தார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி காலி அணியுடன் தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது. தோல்வியடையும் அணி இந்த தொடரிலிருந்து வெளியேறும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
க்ரிஷ் லின்L.B.W  வனிந்து ஹசரங்க191930
சரித் அஸலங்கபிடி – ஆசிப் அலிமுஜீப் உர் ரஹ்மான்010600
ரஹ்மனுள்ள குர்பாஸ்   Run out 191012
டுனித் வெல்லாளகேபிடி – கமிந்து மென்டிஸ்வனிந்து ஹசரங்க030500
சொஹைப் மலிக்பிடி – அஞ்சலோ மத்யூஸ்நுவான் பிரதீப்312331
டேவிட் மில்லர்Bowledவனிந்து ஹசரங்க262002
அசேல குணரட்னL.B.Wவனிந்து ஹசரங்000200
திஸர பெரேராBowledசெஹான் ஆராச்சிகே000400
மஹீஸ் தீக்ஷணபிடி – செஹான் ஆராச்சிகேவனிந்து ஹசரங்க000400
டில்ஷான் மதுசங்க  000100
நுவான் துஷாரபிடி –வனிந்து ஹசரங்க060710
உதிரிகள்  13   
ஓவர்  17.2விக்கெட்  10மொத்தம்127   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
அஞ்சலோ மத்யூஸ்03002300
முஜீப் உர் ரஹ்மான்04004501
இசுரு உதான01000200
வனிந்து ஹசரங்க3.2000906
செஹான் ஆராச்சிகே03002301
நுவான் பிரதீப்03002401

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பகார் ஷமான்Stump – குர்பாஸ்மஹீஸ் தீக்ஷண794984
பக்கார் ஷமான் Bowledநுவான் துஷார000200
தினேஷ் சந்திமால் அசேல குணரட்ன412461
வனிந்து ஹசரங்கBowledஅசேல குணரட்ன191102
கமிந்து மென்டிஸ்Bowledமஹீஸ் தீக்ஷண171310
ஆசிப் அலிபிடி – டேவிட் மில்லர்நுவான் துஷார151301
அஞ்சலோ மத்யூஸ்பிடி -திஸர பெரேராநுவான் துஷார070510
சஹான் ஆராச்சிகே,  010100
இசுரு உதானடு பிடி -னித் வெல்லாளகேநுவான் துஷார020200
       
       
       
உதிரிகள்  07   
ஓவர்  13விக்கெட்  08மொத்தம்188   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
நுவான் துஷார04004004
மஹீஸ் தீக்ஷண04003702
டில்ஷான் மதுசங்க04004300
டுனித் வெல்லாளகே04002500
அசேல குணரட்ன04004102
 
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version