காலிமுகத்திடலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கான அறிவிப்பு!

காலிமுகத்திடலில் உணவு விற்பனை செய்யும் வர்த்தகர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட உணவு விற்பனையாளர்களுக்கு மட்டுமே வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவு செய்யப்பட்ட உணவுப் விற்பனையாளர்களுக்கென பிரத்தியேகமான அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக கொழும்பு நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜேமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply