வெளிநாட்டு தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் பிரித்தானியா மற்றும் போலந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இவர் மீது கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு 07 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் நேற்று (18.08) வயங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய சுதித் கசுன் மாரகே என்ற 55 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நபருக்கு எதிராக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கும் 14 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நபர்களை ஏமாற்றிய சந்தேக நபர் இருந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.