லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஜப்னா கிங்ஸ் அணி நான்கு இலங்கை வீரர்களை தொடர்நது வைத்திருக்கவுள்ளது.
ஜப்னா கிங்ஸ் அணிக்கு திசர பெரேரா இம்முறையும் தலைமை தங்கவுள்ளார். அதேவேளை வனிது ஹசரங்க, மகேஷ் தீக்சன, அவிஷ்க பெர்னாண்டோ, ஆகியோரும் இணைந்து நான்கு வீரர்கள் அணியில் தொடர்ந்தும் வெளியிடப்படாமல் அணிக்குள் தங்க வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள் நாள்வரை தொடர்ந்தும் தக்கவைத்திருக்க முடியும் எனும் நிலையில் பாப் டு பிளேஸிஸ், வஹாப் ரியாஸ் ஆகியோர் அணியில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜப்னா கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜப்னா கிங்ஸ் உரிமையினை, இலங்கையினை பூர்வீமாக கொண்ட அல்லிராஜா சுபாஷ்கரனின் இங்கிலாந்தின் பிரபல நிறுவனமான லைக்கா நிறுவனம் இந்த வருடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கத்து.
