LPL கிண்ணத்தை வென்றது கண்டி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியை அணி வென்று முதற் தடவையாக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பி-லவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஓரா ஆகிய அணிகளுக்கிடையில் அரங்கு நிறைந்த பார்வையளர்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில் கண்டி அணி 05 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.

148 ஓட்டங்கள் என்ற கடடினமான இலக்கை நோக்கி துடுப்பாடிய கண்டி அணிக்கு சிறந்த ஆரம்பம் மொஹமட் ஹரிஸ் மற்றும் கமிந்து மென்டிஷினால் வழங்கப்பட்து. அதிரடியாக துடுப்பாடி அவர்கள் பெற்றுக் கொடுத்த ஓட்டங்கள் வெற்றி பெறுவதற்கு இலகுவானது. ஹரிஸ் ஆட்டமிழந்ததனை தொடர்ந்து டினேஷ் சந்திமால் கமிந்து மென்டீஸுடன் இணைந்து ஓட்டங்களை அதிகரித்தார். இந்த ஜோடியின் இணைப்பாட்டத்துடன் கண்டி அணி இலக்கை அடையாலாம் என்ற நிலை உருவானது. கமிந்து மென்டிஸ், டினேஷ் சந்திமால் ஆகியோரது விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட தம்புள்ளை அணிக்கும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவானது. சூழலில் மேலும் ஒரு விக்கெட் குறுகிய இடைவெளியில் வீழ்த்தப்பட்டது. 13 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்கள் வீழ்த்தப்பட கண்டி வெற்றி பெறுமா என்ற சந்தேகமும் எழுந்தது. அஞ்சலோ மத்தியூஸ், ஆசிப் அலி ஜோடி போட்டியை நிறைவு செய்து வைக்க கூடிய நிலயில் துடிப்பாடி சென்ற வேளையில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்படும் போது ஆசிப் அலி ஆட்டமிழந்தார். அஞ்சலோ மத்தியூஸ் இறுதி வரை நிதானம் காத்து தேவையான பந்துகளை நான்கு ஓட்டங்களாக மாற்றி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற துடுப்பாடிய தம்புள்ளை அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்திலேயே அவிஷ்க பெர்னாண்டோவின் விக்கெட்டினை இழந்த தம்புள்ளை அணி தடுமாறியது. குஷல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகியோர் இணைந்து நிதானமான இணைப்பாடம் ஒன்றை ஏற்படுத்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். இருவரும் 57 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் சத்துரங்க டி சில்வா இணைப்பாட்டத்தை முறியடித்து இருவரையும் ஆட்டமிழக்க செய்தார். அதன் பின்னர் குஷல் பெரேரா, தனஞ்சய டி சில்வா இருவரும் மீண்டும் நிதானமான இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி பின்னர் அதிரடியாக ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர். 63 ஓட்டங்களை நான்காவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் பகிர்ந்தனர்.

இன்றைய போட்டியை பார்வையிட ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க மைதானத்துக்கு வருகை தந்திருந்தார்.

இந்த இரு அணிகளும் முதற் தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவான நிலையில் புதிய LPL சம்பியனாக பி-லவ் கண்டி அணி தெரிவானது. தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவிலை. அஞ்சலோ மத்தியூஸ் கண்டி அணிக்கு தலைமை தாங்குகிறார்.

அணி விபரம்

பி-லவ் கண்டி
மொஹமட் ஹரிஸ், தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்யூஸ், ஆஷிப் அலி, சத்துரங்க டி சில்வா, லஹிரு மதுசங்க, முஜீப் உர் ரஹ்மான், மொஹமட் ஹஸ்னைன், கமிந்து மென்டிஸ், அஷேன் பண்டார, நுவான் பிரதீப்

தம்புள்ளை ஓரா

அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, பினுர பெர்னாண்டோ, ஹெய்டன் கெர், நூர் அஹமட், துஷான் ஹேமந்த, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான்

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
மொஹமட் ஹரிஸ்Bowledநூர் அஹமட்262231
கமிந்து மென்டிஸ்பிடி – சதீர சமரவிக்ரமநூர் அஹமட்443731
தினேஷ் சந்திமால்பிடி – ப்ரமோட் மதுஷான்  பினுர பெர்னாண்டோ242230
அஞ்சலோ மத்யூஸ்  242230
சத்துரங்க டி சில்வாபிடி – ஹெய்டன் கெர்நூர் அஹமட்000400
ஆஷிப் அலிபிடி – குசல் பெரேராபினுர பெர்னாண்டோ191021
லஹிரு மதுசங்க  050310
       
       
       
       
       
உதிரிகள்  09   
ஓவர்  19.5விக்கெட்  05மொத்தம்151   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பினுர பெர்னாண்டோ04003101
தனஞ்சய டி சில்வா03001600
ப்ரமோட் மதுஷான்  2.5002000
ஹெய்டன் கெர்03003000
நூர் அஹமட்04002703
துஷான் ஹேமந்த03002100

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அவிஷ்க பெர்னாண்டோபிடி – மொஹமட் ஹரிஸ்நுவான் பிரதீப்051000
குசல் மென்டிஸ்பிடி – தினேஷ் சந்திமால்சத்துரங்க டி சில்வா222330
சதீர சமரவிக்ரமBowledசத்துரங்க டி சில்வா363050
குசல் பெரேராதசுன் ஷானக 292521
தனஞ்சய டி சில்வாஅஞ்சலோ மத்யூஸ்மொஹமட் ஹஸ்னைன்402903
அலெக்ஸ் ரோஸ்  020200
      
      
      
        
      
உதிரிகள்  10   
ஓவர்  19.3விக்கெட்  04மொத்தம்147   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
அஞ்சலோ மத்யூஸ்02001100
முஜீப் உர் ரஹ்மான்04002400
நுவான் பிரதீப்04003001
சத்துரங்க டி சில்வா04002502
மொஹமட் ஹஸ்னைன்04003801
கமிந்து மென்டிஸ்02001600
    

Social Share

Leave a Reply