பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்று (20.08) இடம்பெற்றுள்ளது.
தெற்கு துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், தீப்பிடித்தது எரிந்துள்ளது.
இதில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 16 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றரன்.