அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர்களாக ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே உள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பெரிதும் உணரப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரையில் எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.