அனுராதபுரத்தில் விபத்து – இருவர் பலி!

அனுராதபுரத்தில் இன்று (21.08) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிப்புரியும்,  36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

பேருந்தை  முந்திச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் ஸ்கூட்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்தில் இருந்த பணியாளர்கள் விபத்துக்குள்ளான ஸ்கூட்டரில் பயணித்த தாய் மற்றும் மகளை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்த நிலையில், துரதிஷ்டவசமாக குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version