சுமார் 40 நாட்கள் முயற்சியின் பிரதிபலனாக இன்று (23.08) சில நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை தொட்டது.
இந்திய நேரப்படி மாலை 06.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில் இதுவரை ஆராயப்படாத லூனா விண்கலத்தை தரையிறக்கும் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்த சில நாட்களிலேயே இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
சந்திரயான் 2, 2019 இல் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, நிலவில் விழுந்ததில் தோல்வியடைந்தது.
இருப்பினும், சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்யிருப்பது, நிலவில் உள்ள திரவ பனியை இந்தியா முழுமையாக பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கும் எனவும், சந்திரனின் புவியியல் கலவையை அடையாளம் காண மிக முக்கியமாக உதவும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இடைவிடாத தொடர் முயற்சியின் காரணமாக இந்தியாவுக்கு இந்த வெற்றி கைகூடியது.
இந்நிகழ்வு இந்தியாவை மட்டுமன்றி முழு உலகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.