எதிர்கட்சிக்கு செல்லும் நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ தனது குழுவுடன் எதிர்க்கட்சிக்கு செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

எதிர்க்கட்சிக்கு சென்று அங்கு  எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், கடந்த வாரம் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது, ​​ இந்த அறிக்கைகள் பொய்யானவை என்று நாமல் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஆனால் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய அரசியல் தீர்மானங்களை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகவும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply