மன்னார் – உயிலங்குளம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 03 கிலோ 394 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக விசேட படையினர் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.