ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை இலங்கையில் நடத்த திட்டம்!

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக அமைச்சரவையின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

இதன்படி, 37ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டை உயர் மட்டத்தில் நடத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இந்த மாநாட்டில் 44 நாடுகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply