இரத்தின கற்களுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடகாவத்தை பகுதியைச் சேரந்த 30 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று (30.08) அதிகாலை சென்னைக்கு புறப்படவிருந்த இல.247, இந்தியன் எயார்லைன்ஸ் என்ற விமானத்தில் பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் 2.311 kg எடையுள்ள இரத்தின கற்களை ஆடைக்குள் மறைத்து எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் திணைகள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
