இந்தியா,பாகிஸ்தான் மோதல் – இரு அணிகளுக்கும் வாய்ப்பான இலக்கு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 இன் மூன்றாவது போட்டி கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வேகப்பந்துவீச்சு மிக ஆக்ரோஷமாக அமைய இந்திய அணி தடுமாறியது ஷஹின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ராப் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை ஆரம்பத்தில் பதம் பார்த்தது.
இந்தியாவின் கதை அவ்வளவுதான் என்ற நிலையில் களமிறங்கிய இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா ஜோடி சத இணைப்பாட்டத்துடன் இந்தியா அணியை பலமான நிலைக்கு எடுத்து சென்றது.

லோகேஷ் ராகுலா, இஷன் கிஷன் ஆகிய இருவரில் ஒருவருக்கே அணியில் வாய்ப்பு என்ற நிலையில் மிக சிறப்பாக துடுப்பாடி தனக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளார் இஷன் கிஷன். ஹார்டிக் பாண்ட்யா நிதனமாக துடுப்பாடி தேவையான நேரத்தில் அணிக்கு கைகொடுக்கும் நல்ல துடுப்பாட்ட வீரர் தான் என்பதனை நிரூபித்து வருகிறார். இன்று அதனை மேலும் வெளிக்காட்டியுள்ளார்.

138 ஓட்ட இணைப்பாட்டத்தை ஹரிஸ் ராப் முறியடித்தார். இஷன் கிஷன் ஆட்டமிழந்த பின்னரும் பாண்ட்யா சிறப்பாக துடுப்பாடிய போதும் ஷகின் ஷா அப்ரிடி அவரின் விக்கெட்டினை தகர்த்து கொடுத்தார். அதே ஓவரில் ஜடேஜா ஆட்டமிழக்க இந்தியா அணி கட்டுப்படுத்தப்பட்டது.

இறுதி நேரத்தில் பும்ரா பெற்றுக்கொண்ட அவரின் கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இன்று இந்தியா அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் கொடுத்த அழுத்தத்தை சுழற் பந்துவீச்சாளர்கள் வழங்க தவறியமை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தியது. களத்தடுபில் பாகிஸ்தான் அணி கவனயீனமாக வீட்டுக் கொடுத்த ஓட்டங்களும் அவர்களுக்கு பாதிப்பை வழங்கும்.

இன்றைய ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகதன்மையினை காட்டியுள்ளது. அதனை சரியாக எதிர்கொண்டு மதியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொடுத்துள்ளனர். கண்டி பல்லேகலையில் இந்த ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடிப்பது இலகுவானது அல்ல.

இந்த இணைப்பாடத்தின் பின்னர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மாற்றங்கள் பல செய்த போதும் ஷகின் ஷா அப்ரிடி மற்றும் ஹரிஸ் ராப் ஆகியோரே முறியடிப்புகளை செய்தனர்.

கடந்த இலங்கை, பங்களாதேஷ் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில்(பிட்ச்) இந்தப் போட்டி நடைபெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பாக இடத்துகர சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதக தன்மை அதிகமாக காணப்படுகிறது. ஓட்டங்கள் பெறும் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்தோடு எல்லைக்கோடுகள் நீண்ட தூரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சராசரி ஓட்டங்கள் பெறப்படும் விறு விறுப்பான போட்டியாக இந்தப் போட்டி அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டிக்கு மிகவும் அதிகமானவர்கள் தருவார்கள் என்ற ஏதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் போட்டியின் ஆரம்ப வேளையில் மிகவும் குறைந்தளவிலானவர்களே வருகை தந்துள்ளனர். எதிர்பாத்தளவு இந்தியா, பாகிஸ்தானியர்கள் வருகை தரவில்லை.

அணி விபரம்
பாகிஸ்தான் அணி மாற்றங்களின்றி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் விளையாடுகிறது. இந்தியா அணி சில மாற்றங்களை செய்துள்ளது. அக்ஷர் பட்டேல், மொஹமட் ஷமி ஆகிய எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் இன்று விளையாடவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் ஷர்டுல் தாகூர் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ரோகித் சர்மாBowledஷகீன் ஷா அப்ரிடி112220
சுப்மன் கில்Bowledஹரிஸ் ரவுஃப்103210
விராட் கோலிBowledஷகீன் ஷா அப்ரிடி040710
ஷ்ரேயாஸ் ஐயர்பிடி – ஃபகார் ஷமான்ஹரிஸ் ரவுஃப்140920
இஷன் கிஷன்பிடி – பாபர் அசாம்ஹரிஸ் ரவுஃப்828192
ஹார்டிக் பாண்ட்யாபிடி – அகா சல்மான்ஷகீன் ஷா அப்ரிடி879071
ரவீந்தர் ஜடேஜாபிடி – முகமட் ரிஸ்வான்ஷகீன் ஷா அப்ரிடி142210
ஷர்ட்டூல் தாகூர்பிடி – ஷதாப் கான்நசீம் ஷா030300
குல்தீப் யாதவ்பிடி – முகமட் ரிஸ்வான்நசீம் ஷா041300
ஜஸ்பிரிட் பும்ரா  161430
மொஹமட் ஷிராஜ்  010100
உதிரிகள்  20   
ஓவர்  48.5விக்கெட்  10மொத்தம்266   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷகீன் ஷா அப்ரிடி10023504
நசீம் ஷா8.5002703
ஹரிஸ் ரவுஃப்09005803
ஷதாப் கான்09005700
முகமட் நவாஸ்08005500
அகா சல்மான்04002100
     


பாகிஸ்தான்

பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா

இந்தியா

ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ஷார்ட்டூல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version