இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 இன் மூன்றாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்தியா அணியின் துடுப்பாட்டம் நிறைவடைய ஆரம்பித்த மழை விடாத காரணத்தினால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்து. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.
நேபாளம் இந்தியா அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுமணி இரண்டாம் சுற்று வாய்ப்பை பெற்றுக் கொள்ளும்.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வேகப்பந்துவீச்சு மிக ஆக்ரோஷமாக அமைய இந்திய அணி தடுமாறியது ஷஹின் ஷா அப்ரிடி, ஹரிஸ் ராப் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்களை ஆரம்பத்தில் பதம் பார்த்தது.
இந்தியாவின் கதை அவ்வளவுதான் என்ற நிலையில் களமிறங்கிய இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா ஜோடி சத இணைப்பாட்டத்துடன் இந்தியா அணியை பலமான நிலைக்கு எடுத்து சென்றது.
லோகேஷ் ராகுலா, இஷன் கிஷன் ஆகிய இருவரில் ஒருவருக்கே அணியில் வாய்ப்பு என்ற நிலையில் மிக சிறப்பாக துடுப்பாடி தனக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளார் இஷன் கிஷன். ஹார்டிக் பாண்ட்யா நிதனமாக துடுப்பாடி தேவையான நேரத்தில் அணிக்கு கைகொடுக்கும் நல்ல துடுப்பாட்ட வீரர் தான் என்பதனை நிரூபித்து வருகிறார். இன்று அதனை மேலும் வெளிக்காட்டியுள்ளார்.
138 ஓட்ட இணைப்பாட்டத்தை ஹரிஸ் ராப் முறியடித்தார். இஷன் கிஷன் ஆட்டமிழந்த பின்னரும் பாண்ட்யா சிறப்பாக துடுப்பாடிய போதும் ஷகின் ஷா அப்ரிடி அவரின் விக்கெட்டினை தகர்த்து கொடுத்தார். அதே ஓவரில் ஜடேஜா ஆட்டமிழக்க இந்தியா அணி கட்டுப்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் கொடுத்த அழுத்தத்தை சுழற் பந்துவீச்சாளர்கள் வழங்க தவறியமை பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தியது. களத்தடுபில் பாகிஸ்தான் அணி கவனயீனமாக வீட்டுக் கொடுத்த ஓட்டங்களும் இந்தியா அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற கைகொடுத்தது.
இன்றைய ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகதன்மையினை காட்டியுள்ளது. அதனை சரியாக எதிர்கொண்டு மதியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொடுத்தனர். கண்டி பல்லேகலையில் இந்த ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடிப்பது இலகுவானது அல்ல என்ற நிலை காணப்பட்ட போதும் பலப்பரீட்சையினை மழை இல்லாமல் செய்தது.
அணி விபரம்
பாகிஸ்தான்
பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா
இந்தியா
ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷன் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, ஷார்ட்டூல் தாகூர், குல்தீப் யாதவ், மொஹமட் ஷிராஜ்
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரோகித் சர்மா | Bowled | ஷகீன் ஷா அப்ரிடி | 11 | 22 | 2 | 0 |
| சுப்மன் கில் | Bowled | ஹரிஸ் ரவுஃப் | 10 | 32 | 1 | 0 |
| விராட் கோலி | Bowled | ஷகீன் ஷா அப்ரிடி | 04 | 07 | 1 | 0 |
| ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி – ஃபகார் ஷமான் | ஹரிஸ் ரவுஃப் | 14 | 09 | 2 | 0 |
| இஷன் கிஷன் | பிடி – பாபர் அசாம் | ஹரிஸ் ரவுஃப் | 82 | 81 | 9 | 2 |
| ஹார்டிக் பாண்ட்யா | பிடி – அகா சல்மான் | ஷகீன் ஷா அப்ரிடி | 87 | 90 | 7 | 1 |
| ரவீந்தர் ஜடேஜா | பிடி – முகமட் ரிஸ்வான் | ஷகீன் ஷா அப்ரிடி | 14 | 22 | 1 | 0 |
| ஷர்ட்டூல் தாகூர் | பிடி – ஷதாப் கான் | நசீம் ஷா | 03 | 03 | 0 | 0 |
| குல்தீப் யாதவ் | பிடி – முகமட் ரிஸ்வான் | நசீம் ஷா | 04 | 13 | 0 | 0 |
| ஜஸ்பிரிட் பும்ரா | 16 | 14 | 3 | 0 | ||
| மொஹமட் ஷிராஜ் | 01 | 01 | 0 | 0 | ||
| உதிரிகள் | 20 | |||||
| ஓவர் 48.5 | விக்கெட் 10 | மொத்தம் | 266 |
