விஜய் சேதுபதி மீது தாக்குதல் – நடந்தது என்ன?

நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவலும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜய் சேதுபதி பெங்களூரில் உள்ள மறைந்த நடிகர் புனித்குமாரின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, பெங்கலூர் விமானநிலையத்தில் விமானத்துக்காக சென்று கொண்டிருந்த வேளையில், இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் பின் புறமாக ஓடி வந்து ஒருவர் எகிறி தாக்கும் வீடியோ வெளியானது. இதனை பார்த்தவர்கள் விஜய் சேதுபதி மீது தாக்குதல் என தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், அவரோடு சென்ற இன்னுமொரு நடிகரான மகாகாந்தி மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுளளது எனவும் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

நடிகர் மகாகாந்தி மற்றும், ஜோன்சன் என்பவர்களுக்கிடையில் கருது மோதல் இடம்பெற்றுள்ளது. அதன் காரணமாக ஜோன்சன் என்ற நபர், விஜய் சேதுபதியோடு சென்ற நடிகர் மகாகாந்தி மீது எகிறி தாக்குதல் நடாத்தியுளார். தவிர விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நடிகர் மகாகாந்தி மீது தாக்குதல் நடைபெறும் போது, விஜய் சேதுபதி தள்ளுப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

விஜய் சேதுபதி மீது தாக்குதல் - நடந்தது என்ன?
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version