மானிப்பாய் பகுதியில் விபத்து – ஒருவர் பலி!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (03.09) மாலை சண்டிலிப்பாயிலிருந்து இளவாய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மற்றுமொறு மோட்டார் சைக்கிளும் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சில்லாலை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply