ஆசிய கிண்ணம் கொழும்பிலிருந்து மாறுமா?

எதிர்வரும் 9 திகதி முதல் கொழும்பில் இடம்பெறவுள்ள ஆசிய கிண்ண போட்டிகளை கண்டி அல்லது ஹம்பாந்தோட்டைக்கு மாற்றும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் அமைந்துள்ள மாளிகாவத்த பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக மழையுடன் கூடிய காலநிலை மற்றும் வெள்ள நிலை காரணமாகவே, இந்த விடயம் தொடர்பில் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் மற்றும் இலங்கை கிரிக்கெடிற்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் போட்டிகள் அனைத்தும் கண்டியில் நடப்பதை பெரிதும் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒளிபரப்பு ஆயத்தங்களை செய்வதற்கு கண்டி மைதானம் இலகுவாக இருப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கண்டியில் எதிர்வரும் நாட்களில் மழையின் நிலை சற்று குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மைதான மாற்றம் தொடர்பில் எந்த தீர்மானம் எடுக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் நீடிக்கின்றன.

Social Share

Leave a Reply