ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டியான சுப்பர் 04 தொடரின் இன்றைய(06.09) பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 07 விக்கெட்களினால் இலகுவாக வெற்றி பெற்றது.
லாகூரில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சு மற்றும் நிதானமான துடுப்பாட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது.
194 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இனாம் உல் ஹக் சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். சகல வீரர்களுடனும் சராசரி இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி பாகிஸ்தான் அணியின் வெற்றியை இலகுபடுத்தினார். இனாம் உல் ஹக் மற்றும் முஹமட் ரிஸ்வான் ஆகியோர் இணைந்து 85 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இனாம் உல் ஹக் 78 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க முஹமட் ரிஷ்வான் தொடர்ந்தும் நிதானமாக ஓட்டங்களை அதிகரித்து அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. பாகிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சில் தடுமாறிய பங்களாதேஷ் அணி 38.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 193 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்ட வேளையில் ஷகிப் அல் ஹசன், முஸ்பிகியுர் ரஹீம் இணைந்து 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அதன் மூலமாகவே இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற முடிந்தது. கடந்த போட்டியில் நசீம் ஷா, ஹரிஸ் ராப், ஷகின் ஷா அப்ரிடி ஆகியோர் பத்து விக்கெட்களை கைப்பற்றினார்கள். இந்தப் போட்டியில் 8 விக்கெட்களை கைப்பற்றினார்கள். இந்த பந்து வீச்சு கூட்டே பாகிஸ்தான் அணியின் பலமாக மாறி வருகிறது.
சுப்பர் 04 சுற்றில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. லீக் போட்டிகளில் முதலிரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவுள்ளன.
அணி விபரம்
உபாதையடைந்துள்ள நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பங்களாதேஷ் அணி சார்பாக விளையாடவில்லை. லிட்டன் டாஸ் அவருக்கு பதிலாக விளையாடுகிறார். பாகிஸ்தான் அணி சார்பாக முகமட் நவாஸ் நீக்கப்பட்டு பஹீம் அஷ்ரப் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
ஃபகார் ஷமான் | L.B.W | ஷொரிபுல் இஸ்லாம் | 20 | 31 | 3 | 0 |
இமாம் உல் ஹக் | Bowled | மெஹிடி ஹசான் மிராஸ் | 78 | 84 | 5 | 4 |
பாபர் அசாம் | Bowled | தஸ்கின் அஹமட் | 17 | 22 | 1 | 0 |
முகமட் ரிஸ்வான் | 63 | 79 | 7 | 1 | ||
அகா சல்மான் | 12 | 21 | 1 | 0 | ||
உதிரிகள் | 04 | |||||
ஓவர் 39.3 | விக்கெட் 03 | மொத்தம் | 194 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
தஸ்கின் அஹமட் | 08 | 01 | 32 | 01 |
ஷொரிபுல் இஸ்லாம் | 08 | 01 | 24 | 01 |
ஹசான் மஹ்முட் | 07 | 00 | 46 | 00 |
மெஹிடி ஹசான் மிராஸ் | 10 | 00 | 51 | 01 |
ஷகிப் அல் ஹசான் | 5.3 | 00 | 31 | 00 |
ஷமீம் ஹொசைன் | 01 | 00 | 08 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
மொஹமட் நைம் | பிடி – ஹரிஸ் ரவுஃப் | ஹரிஸ் ரவுஃப் | 20 | 25 | 4 | 0 |
மெஹிடி ஹசான் மிராஸ் | பிடி – ஃபகார் ஷமான் | நசீம் ஷா | 00 | 01 | 0 | 0 |
லிட்டன் டாஸ் | பிடி – முகமட் ரிஸ்வான் | ஷகீன் ஷா அப்ரிடி | 16 | 13 | 4 | 0 |
ஷகிப் அல் ஹசான் | பிடி – ஃபகார் ஷமான் | பஹீம் அஷ்ரப் | 53 | 57 | 7 | 0 |
தௌஹித் ரிதோய் | Bowled | ஹரிஸ் ரவுஃப் | 02 | 09 | 0 | 0 |
முஷ்பிகுர் ரஹீம் | பிடி – முகமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரவுஃப் | 64 | 87 | 5 | 0 |
ஷமீம் ஹொசைன் | பிடி – இமாம் உல் ஹக் | 16 | 23 | 0 | 1 | |
அபிப் ஹொசைன் | பிடி – பஹீம் அஷ்ரப் | நசீம் ஷா | 12 | 11 | 0 | 1 |
தஸ்கின் அஹமட் | பிடி – முகமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரவுஃப் | 00 | 01 | 0 | 0 |
ஷொரிபுல் இஸ்லாம் | Bowled | நசீம் ஷா | 01 | 03 | 0 | 0 |
ஹசான் மஹ்முட் | 01 | 02 | 0 | 0 | ||
உதிரிகள் | 08 | |||||
ஓவர் 38.4 | விக்கெட் 10 | மொத்தம் | 193 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
ஷகீன் ஷா அப்ரிடி | 07 | 01 | 42 | 01 |
நசீம் ஷா | 5.4 | 00 | 34 | 03 |
ஹரிஸ் ரவுஃப் | 06 | 00 | 19 | 04 |
பஹீம் அஷ்ரப் | 07 | 00 | 27 | 01 |
ஷதாப் கான் | 07 | 00 | 35 | 00 |
அகா சல்மான் | 01 | 00 | 11 | 00 |
இப்திகார் அகமட் | 05 | 00 | 20 | 01 |
பங்களாதேஷ்
1 மொஹமட் நைம், 2 மெஹிடி ஹசான் மிராஸ், 3 லிட்டன் டாஸ் , 4 ஷகிப் அல் ஹசான் (தலைவர்), 5 தௌஹித் ரிதோய், 6 முஷ்பிகுர் ரஹீம் (வி.கா), 7 ஷமீம் ஹொசைன் பட்வாரி, 8 அபிப் ஹொசைன், 9 தஸ்கின் அஹமட், 10 ஹசான் மஹ்முட், 11 ஷொரிபுல் இஸ்லாம்
பாகிஸ்தான்
1 பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 இமாம் உல் ஹக், 5 இப்திகார் அகமட், 6 அகா சல்மான், 7 ஷதாப் கான், 8 பஹீம் அஷ்ரப் 9 ஷகீன் ஷா அப்ரிடி, 10 ஹரிஸ் ரவுஃப், 11 நசீம் ஷா