நாட்டில் வினைத்திறனான பொருளாதார வளர்ச்சியை காணமுடியாது!

நாட்டில் ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டாலும் வினைத்திறனான பொருளாதார வளர்ச்சியை காணமுடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்  பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.  

வங்கி வட்டி வீதம் இதுவரையில் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், “சந்தை வட்டி விகிதங்கள் குறைந்து வருவதையும், கடன் குறைந்து வருவதையும் நாங்கள் இன்னும் பார்க்கவில்லை. 

வங்கித் துறை இன்னும் அதிக அளவிலான வட்டி விகிதங்களை பராமரிக்கிறது. எனவே, இதுபோன்ற கொள்கைகள் மூலம் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாது.

நிலைப்படுத்தல் தொடர்பான பொருளாதாரக் கொள்கைகள் செயல்திறனைக் காட்டினாலும், அவை பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் பங்களிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply