வியட்நாமில் தீவிபத்து : டஜன் கணக்கானவர்கள் பலி!

வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

பத்தாவது மாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புகுழுவினர் 70 பேரை மீட்டுள்ளதாகவும், 54 பேர் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கருத்து வெளியிட்ட குடியிருப்பாளர் ஒருவர் தீவிரமான தீ என வர்ணித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை வியட்நாமில் அண்மையக்காலங்களில் அதிக தீவிபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version