இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் சுப்பர் 04 சுற்றின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி பங்களாதேஷ் அணியை துடுப்பாட பணித்தது. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட தடுமாறிப் போனது. அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகியோர் சத இணைப்பாட்டத்தை மேற்கொண்டு அணியை மீட்டு எடுத்தனர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். இருவரும் ஆட்டமிழக்க அடுத்தடுத்து மீண்டும் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. ஆனாலும் இறுதியில் நசும் அஹமட், மெஹதி ஹசன் ஆகியோர் போராடி ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க பங்களாதேஷ் அணி 250 ஓட்டங்களை தாண்டியது.
இந்தியா அணி தமது சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கியுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரன்டிஸ்ட் ஹசன் | Bowled | ஷர்டூல் தாகூர் | 12 | 12 | 0 | 0 |
| லிட்டோன் டாஸ் | Bowled | மொஹமட் ஷமி | 00 | 02 | 0 | 0 |
| அனாமல் ஹக் | பிடி- லோகேஷ் ராகுல் | ஷர்டூல் தாகூர் | 04 | 11 | 1 | 0 |
| ஷகிப் அல் ஹசன் | Bowled | ஷர்டூல் தாகூர் | 80 | 85 | 6 | 3 |
| மெஹதி ஹசன் மிராஸ் | பிடி- ரோஹித் ஷர்மா | அக்ஷர் பட்டேல் | 13 | 28 | 1 | 0 |
| தௌஹித் ரிதோய் | பிடி- திலக் வர்மா | மொஹமட் ஷமி | 54 | 81 | 5 | 2 |
| ஷமீம் ஹொசைன் | L.B.W | ரவீந்தர் ஜடேஜா | 01 | 05 | 0 | 0 |
| நசும் அஹமட் | Bowled | பிரசித் கிருஷ்ணா | 44 | 45 | 6 | 1 |
| மெஹதி ஹசன் | 29 | 23 | 3 | 0 | ||
| ரன்ஷிம் ஹசன் | 14 | 18 | 1 | 1 | ||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 08 | மொத்தம் | 265 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| மொஹமட் ஷமி | 08 | 01 | 32 | 02 |
| ஷர்டூல் தாகூர் | 10 | 00 | 65 | 03 |
| பிரசித் கிருஷ்ணா | 09 | 00 | 43 | 01 |
| அக்ஷர் பட்டேல் | 09 | 00 | 47 | 01 |
| திலக் வர்மா | 04 | 22 | 21 | 00 |
| ரவீந்தர் ஜடேஜா | 10 | 01 | 53 | 01 |