கஞ்சா பயிரிட்டவர் கைது!

ரஷ்ய பிரஜை ஒருவர் இலங்கையில் கஞ்சா பயிரிட்டிருந்த இடத்தை ஹபராதுவ பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

ரஷ்ய பிரஜை ஒருவரை தாக்கி பலவந்தமாக பணம் பறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்றுமொரு ரஷ்ய பிரஜை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின்போதே குறித்த கஞ்சா பயிர் செய்கை தொடர்பான விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய பிரஜை தங்கியிருந்த இடத்திலேயே இடஙக பயிர்செய்கையை மேற்கொண்டுள்ளார்.

சுற்றிவளைக்கப்பட்ட பகுதியிலிருந்து 591 கஞ்சா செடிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply