மன்னார் இராமர் பாலத்துக்கு அண்மித்த பகுதியில் சிரமதானம்

இன்று(16.09) சர்வதேச கடற்கரை தூய்மை தினமாகும். இந்த நாளில் உலகின் பலபாகங்களிலும் உள்ள கடற்கரைகள், பொது மக்கள் மற்றும் சமூக அமைப்புக்களினால் துப்பரவு செய்யப்படுவது வழக்கம்.

சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு மன்னார் தலைமன்னார் துறை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர், மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 55 பேர் இணந்து கடற்கரையைத் இன்று துப்புரவு செய்தனர். காலை 8.30 மணிளவில் தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் இந்த சிரமதானப்பணி இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் கிராமத்தில் அமைந்துள்ள வாயு சுற்றுலா விடுதியை அண்மித்த கடற்கரையே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கடற்கரையானது இராமர் பாலத்தை அண்மித்த பகுதியாகக் காணப்படுவதனால் பெருமளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பாடசாலை ஆசிரிய மாணவர்களின் இந்தச் செயற்பாடானது மிகவும் பாராட்டத்தக்க ஒரு செயலாகும்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version