தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் தாவடி – வன்னிய சிங்கம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (16.09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும், பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது யுவதியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த இளைஞன் தனது குழுவினருடன் சென்று வீட்டினை தாக்கி சேதப்படுத்தி பெற்றோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version