புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் மூலம் பணத்தை அச்சிடுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கும் அரசாங்கத்தின் வாய்ப்புகள் பாரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய வங்கியை மேலும் சுதந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், புதிய மத்திய வங்கிச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன் சிறப்பு என்னவென்றால், மத்திய வங்கி தொடர்ந்து சுதந்திரமாக இருக்கும். இது மத்திய வங்கியின் மக்கள் இறையாண்மையுடன் உள்ள பிணைப்பை மேலும் விரிவுபடுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.