இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபடும் பின்னணியில், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திருத்த சட்டமூலத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் செயற்பாடுகளில் ஈடுபடுகவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சின் முக்கிய அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் டி.வீரசிங்கவின் தலைமையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத்திற்கான பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு கூடிய போதே இதுதொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால் இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சட்டத்தின் மூலம் படகு உரிமையாளரைத் மட்டுமன்றி, படகின் ஓட்டுநர் மற்றும் படகில் பயணிக்கும் எந்தவொரு நபருக்கும் தண்டப்பணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் விவகாரம் தொடர்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவரும் நிலையில் இதுவரை எவ்வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.