நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில், பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தற்போது கண்காணிப்பு நடவடிக்கைய மீளவும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.