இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!

தமிழ் திரை உலகில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

12ம் வகுப்பில் கல்வி கற்கும் 16 வயதுடைய இவர் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மன அழுத்தத்தை போக்க சிகிச்சையளிக்கப்பட்டு வந்ததாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (19.09) அதிகாலை 3 மணி அளவில் இவர் தூக்கிட்டு நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர், அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திரையுலகினர் பலரும் தங்கள் அனுதாபங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version