என்ஜியோகிராம் இயந்திரம் இல்லை – மாரடைப்பை கண்டறிய முடியாத நிலையில் பதுளை மக்கள்!

பதுளை பொது வைத்தியசாலையில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 1883 பிரேத பரிசோதனைகளில் 770 பேர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளுக்காக, ஊவா மாகாணத்திலுள்ள 1.5 மில்லியன் மக்கள் கண்டி மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகளுக்கு வருகை தர வேண்டிய துர்பாக்கிய நிலையை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஜியோகிராம் இயந்திரம் இல்லாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு பதிவாகும் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலை அதிக பாதிப்பை ஏற்டபடுத்துவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நாளொன்றுக்கு சுமார் 170 இருதய நோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதயநோய் நிபுணர் வைத்தியர் கோத்தாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version