வெறிநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த சில வருடங்களாக ரேபிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

குறித்த ரேபிஸ் வகை நோய்கள் பொதுவாக  நாய் அல்லது பிற விலங்குகள் கடிப்பதன் மூலம் ஏற்படுகிறது. 

வெறிநோய் பற்றிய போதிய தெளிவின்மை அல்லது அறியாமையே மரணங்கள் நிகழ்வதற்கு காகரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெறிநோய் தடுப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் ஹேஷான் குருகே,  “கடந்த சில வருடங்களில் நாய்கள் அல்லாத விலங்குகளால் கூட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை ஆய்வு செய்யும் போது, ​​வெறிநாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பலர், நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டிடங்களுக்கு அருகில் தூங்கிவிட்டு, காலையில் எழுந்ததும், விலங்கு கடித்துள்ளதை உணர்கின்றனர். அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 

ஆனால் சிறுதி நேரத்தில்  ஹைட்ரோஃபோபியாவின் அறிகுறிகள் அந்த மக்களின் உடலில் தோன்றும்.  கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏதேனும் விலங்கு கடித்தால் முறையான முதலுதவி அளிக்கப்பட வேண்டும். காயத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். பின்னர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள். இதைச் செய்தால் இலங்கையில் இருந்து ஹைட்ரோபோபியாவை ஒழிக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version