இன்றைய வானிலை!

இலங்கையின் பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22.09) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என முன்னுரைத்துள்ளது.

ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சில  இடங்களில் மி.மீ. 50 களில்  மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, ற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version