“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” – கூழாவடியில் ஆர்பாட்டம்!

கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (22.09) கிராம மக்களினால் முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

"போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்" - கூழாவடியில் ஆர்பாட்டம்!

மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிக்கும் நோக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமானது கூழாவடி கலைவாணி வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து பிரதான வீதி ஊடாக கூழாவடி சந்திவரை சென்று மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்ததும், அருவி பெண்கள் வலையமைப்பினால் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வீதியோர நாடகம் ஒன்றும் இடம்பெற்றது.

அருவி பெண்கள் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக குறித்த கிராம மக்களிடையே கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழித்தல்” என்பன தொடர்பாக இளைஞர், யுவதிகள் மற்றும் வயோதிபர்களுக்கிடையே விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டினையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்த வீதி நாடகத்தினை பல்கலைக்கழக இளைஞர் நாடக குழுவினர் திறம்பட நடித்து போதை ஒழிப்பு தொடர்பான பல விடயங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இறுதியாக பாடசாலை வளாகம் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் தர்ஷனி ஸ்ரீகாந்த், கணக்காளர் எஸ்.உஷாந்தினி, பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அருவி பெண்கள் வலையமைப்பின் உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் பாசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version