வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (22.09) பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஓமந்தையில் வெதுப்பத்தினை நடத்தி வந்த சிவசேகரம் தினேசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது  பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version