இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க உலகக்கிண்ண தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. LPL தொடரில் ஏற்பட்ட உபாதை குணமடையாத நிலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
ஆரம்பத்தில் அவர் முதற் கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற நிலை காணப்பட்ட போதும், தற்போது முழுமையாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுளதாக அறிய முடிகிறது. டுஸான் ஹேமந்த அவரின் இடத்தை பிடிப்பார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. வனிந்து அணியில் இடம்பிடித்திருந்தாலும் களத்தடுப்புக்காக அவரை 15 பேர் அடங்கிய குழுவுக்குள் இணைக்குமாறு மஹேல ஜெயவர்த்தன அறிவுறுத்தியதாக அறிய முடிகிறது.
சாமிக்க கருணாரட்ன மேலதிக வீரராக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அறிய முடிகிறது. தஸூன் சாணக்க ஆரம்ப கட்டப் போட்டிகளில் பிரகாசிக்க தவறினால் அவரை அணியால் நீக்கி சாமிக்க கருணாரட்னவை அணிக்குள் கொண்டு வரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
வனிந்து ஹசரங்க விளையாடாத நிலையில் டுனித் வெல்லாளகே முழுமையாக விளையாடுவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி.
தஸூன் சாணக்க, குஷல் பெரேரா, டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், சரித் அசலங்க, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷண, டுஸான் ஹேமந்த, மதீஷ பத்திரன, கஸூன் ரஜித, டில்ஷான் மதுசங்க, லஹிரு குமார.
