நீச்சலடித்த போலந்து இளம் பெண் மரணம்

தங்காலை, மங்ககோ கடகரையின் அபாயமான பகுதியில் நீச்சலடித்து இளம் ஆணும், பெண்ணும் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஊர்மக்களினால் அவர்கள் காப்பாற்றப்பட்டு தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் 22 வயதான பெண் இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த பெண் போலந்து நாட்டை சேர்ந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இறந்தவரின் உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீச்சலில் ஈடுப்பட்ட ஜோடி காதலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version