ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி இரண்டாமிடத்தைப் பெற்று வெளிப்பதக்கத்தை வென்றுள்ளது. சீனாவில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 19 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய இந்தியா மகளிர் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஸ்மிர்த்தி மந்தன 46 ஓட்டங்களையும், ஜெம்மிமா ரொட்ரிகஸ் 42 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் பெற்றுக்கொடுத்த ஓட்டங்கள் மூலமாகவே இந்தியா அணி வெற்றி பெற்றுக் கொண்டது. இலங்கை அணியின் பந்துவீச்சில் உதேஷிகா பிரபோதினி, சுகந்திகா குமாரி, இனோக்கா ரணவீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஹாசினி பெரேரா 25 ஓட்டங்களையும், நிலுக்ஷி டி சில்வா 23 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் டைட்டஸ் சாது 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். ராஜேஸ்வரி கைக்வோர்ட் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணி இம்முறையே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்கியது. அதில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.
பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொண்டது.