உத்தியோகபூர்வமற்ற உலகக்கிண்ண இலங்கை அணி

உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட்டினால் விளையாட்டு துறை அமைச்சின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட அணி விபரம் வெளியாகியுள்ள அதேவேளை குறித்த வீரர்கள் மற்றும் அணியோடு பயணிக்கும் பயிற்றுவிப்பாளர் உட்பட்ட உத்தியோகஸ்தர்களின் விபரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அணி விபரத்தை அறிய முடிந்துள்ளது.

இன்று(29.09) 01 மணி வரை இலங்கை கிரிக்கெட் அணி விபரத்தை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும் இன்று இரவு 7 மணிக்கு இலங்கை அணி புறப்பட்டு செல்லவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அணி விபரம்

தஸூன் சாணக்க(தலைவர்), குஷல் மென்டிஸ்(உப தலைவர்), டிமுத் கருணாரட்ன, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, டுனித் வெல்லாளகே, மஹீஸ் தீக்ஷன, கஸூன் ரஜித, மதீஷ பத்திரன, லஹிரு குமார, வனிந்து ஹசரங்க, டில்ஷான் மதுசங்க.

மஹீஸ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க, டில்ஷான் மதுசங்க ஆகிய மூவரும் உபாதைகளுக்கு உப்பட்டு தெரிவு செய்யபப்ட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டுஸான் ஹேமேந்த, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் மேலதிக வீரர்களாக அணியோடு பயணிக்கவுள்ளதாக ஆவணங்கள் மூலமாக வெளியாகியுளளது.

இறுதி நேரத்தில் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவரா என்ற விபரங்கள் இலங்கை கிரிக்கெட்டினால் உத்தியோகபூர்வ விபரங்கள் வெளியானதன் பின்னரே உறுதியான இறுதி விபரங்கள் தெரியவரும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version