முறியடிக்கப்பட்ட 20-20 சாதனைகள்

சர்வதேச 20-20 கிரிக்கெட் போட்டிகளின் சாதனைகள் சில இன்று நேபாளம் அணியனால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பித்த நிலையில் நேபாளம் அணி மொங்கோலியா அணிக்கெதிராக 300 ஓட்டங்களை தாண்டி 20-20 போட்டிகளில் பெறப்பட்ட முதல் 300 ஓட்டங்கள் என்ற சாதனையை தொட்டது. அந்த அணியின் வீரர் குஷால் மல்லா 34 பந்துகளில் சதத்தை அடித்து வேகமான 20-20 சத சாதனையை தனதாக்கினார். டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதத்தை பெற்றிருந்தனர்.

9 பந்துகளில் அரைச்சதத்தை விளாசி டிபேன்ரா சிங் ஐரீ 20-20 போட்டிகளில் வேகமான அரைச்சதத்தை தனதாக்கினார். இனி இந்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது. சமப்படுத்த மட்டுமே முடியும். 10 பந்துகளில் அவர் 52 ஓட்டங்களை பெற்றுள்ளார். 20-20 போட்டிகளில் 500 இற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் நிறைவு செய்தமை இதுவே முதற் தடவையாகும். . ஏற்கனவே யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைச்சதத்தை அடித்திருந்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நேபாளம் அணி 20 ஓவர்களில் 03 விக்கெட்களை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இத்தில் குஷால் மல்லா 50 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ரோஹித் படேல் 37 பந்துகளில் 61 ஓட்டங்களையும், டிபேன்ரா சிங் ஐரீ 10 பந்துகளில் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இதில் பெறப்பட்ட 26 சிக்ஸர்கள் 20-20 போட்டிகளில் ஒரு அணி பெற்ற கூடுதலான சிக்ஸர்கள் ஆகும்.

இந்தப் போட்டியில் நேபாளம் அணி 273 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதே 20-20 சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட பெரிய வெற்றியாக மாறியுள்ளது.

Social Share

Leave a Reply