இந்திய கிரிக்கெட் அணிக்கும், அவுஸ்திரேலியா அணிக்கும் இடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலிரு போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சுப்மன் கில்லுக்கு ஓய்வு வழங்கி விளையாடியது இந்தியா.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் மிற்செல் மார்ஷ் 96 ஓட்டங்களையும், ஸ்டிபன் ஸ்மித் 74 ஓட்டங்களையும், மார்க்ஸ் லபுஷேன் 72 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ரோஹித் ஷர்மா 81 ஓட்டங்களையும், விராட் கோலி 56 ஒட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீசில் க்ளென் மக்ஸ்வெல் 4 விக்கெட்களையும், ஜோஸ் ஹசல்வூட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் நாயகனாக க்ளென் மக்ஸ்வெல் தெரிவானர். போட்டி தொடர் நாயகனாக சுப்மன் கில் தெரிவினார்.
இந்த தொடர் வெற்றி மூலம் உலகக்கிண்ண தொடரில் இந்தியா அணி முதலிட அணியாக களமிறங்கவுள்ளது.