முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா தான் மாவட்ட நீதிபதி, நீதவான் மன்ற நீதிபதி, குடும்ப நல நீதிபதி, முதன்மை நீதிமன்ற நீதிபதி, சிறு குற்ற நீதிமன்ற நீதிபதி, சிறுவர் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளிலிருந்து விலகுவதாக 23 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தின் மூலமாக நீதிச் சேவைகள் ஆணைக்குழு செயலாருக்கு அறிவித்துள்ளார்.
தனக்கு ஏற்பட்டுள்ள அச்சறுத்தல், உயிர் ஆபத்து மற்றும் அழுத்தங்கள் ஆகிய காரணங்களை தனது பதவி விலகளுக்கான காரணங்களாக தெரிவித்துள்ளார்.
முல்லைவத்தீவில் தொல்பொருள் திணைகள நில ஆக்கிரமிப்பு மற்றும் குருந்தூர் மலை விவகாரங்கள் எனபனவற்றில் பல அழுத்தங்கள் நீதிபதிக்கு வழங்கப்படுகின்றமையே அவரின் பதவி விலகளுக்கு காரணமாக இருக்குமென நம்பப்படுகிறது.
ஒரு மாவட்ட நீதிபதிக்கே இவ்வாறான நிலை ஏற்படுகிறது என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கேள்வியெழுப்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.