நீதிபதி பதவி விலகல் தோல்வியடைந்த நாடு என்பது உறுதி-மனோ

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பதவி விலகியதன் மூலம், இந்த நாடு தோல்வியடைந்த நாடு என்பது உறுதியாகியுளளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் விமர்சித்துள்ளளார். இதுவே இறுதிக்கட்ட வீழ்ச்சி என தெரிவித்துள்ள அவர், இந்த சம்பவத்தின் மூலம் தமிழ் இனம் பிரிவினைகளை சந்தித்துளளது என்ற தமிழரின் கருத்தை உறுதி செய்வதாக அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

போலி தேசிய வாதிகள் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் நீதிபதிகளை தாக்குவதாக கூறியுள்ள மனோ கணேசன், பெரும்பான்மை சிங்கள அரசியல் வாதிகள், சமூக செயற்பாட்டு அமைப்புகள் சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறிவிட்டதாவும் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விடயம் தற்போது அசிட் பரிசோதனையாக மாறிவிட்டது எனவும் விமர்சித்துள்ளளார்.

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளமை மூலம் இலங்கையில் மீதமுள்ள சட்ட ஒழுங்கம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துளளார். அதிகாரப்பகிர்வு, பொறுப்புக் கூறல் போன்ற விடயங்களில் வேற்றுமை இருக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு திரும்பியதும் இதற்கு பதிலளிக்க வேண்டுமென கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துளளார்.

தொடர்புடைய செய்தி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version